பேசியே ஒரு படத்தை ஹிட்டாக்கினவங்க கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க

Total Views : 171
Zoom In Zoom Out Read Later Print

நான் கூறியது சரித்திர உண்மை... சர்ச்சை பேச்சு குறித்து கமல் விளக்கம்

 கமல் ஹாஸன் 4 தொகுதியில் நினைத்ததை விட அதிகமாகவே ஓட்டு வாங்குவார் என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல் ஹாஸன் தெரிவித்தது பற்றி தான் நாள் கணக்கில் சமூக வலைதளங்களில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட கட்சியை சேர்ந்தவர்கள் கமலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து விடாமல் ட்வீட் செய்து அவருக்கும், அவரின் கட்சிக்கும் பெரிய அளவில் இலவச விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

மிஸ்டர் லோக்கல் மாஸா, மொக்கையா?: ட்விட்டர் விமர்சனம் தேர்தல் நேரத்தில் அவர்கள் தேசிய அளவில் கொடுத்த அந்த இலவச விளம்பரம் கமலுக்கு சாதகமாக அமைந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இது குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கூறியிருப்பதாவது, கமல் 30 வினாடி பேசுனதை 3 நாளா பேசிக்கிட்டுருக்கோமே...பேசியே ஒரு படத்தை சூப்பர்ஹிட் ஆக்கினவங்க இப்போ கமல் பேசுனதை நாடு முழுக்க பிரபலப்படுத்திட்டாங்க.... இதைவிட ஒரு சூப்பர் பிரச்சாரம் அவருக்கு அமையுமா? நான் நினைக்கிறேன்... 4 தொகுதியில நினைச்சதை விட அதிகமாவே வோட்டு வாங்குவாரு பாருங்க! கஸ்தூரி கூறியது உண்மையே. பத்து பைசா செலவில்லாமல் கமலுக்கு சூப்பராக விளம்பரம் கிடைத்துள்ளது. அவர் தெரிந்து பேசினாரோ, தெரியாமல் பேசினாரோ ஆனால் ஒர்க்அவுட் ஆகிவிட்டது.


Read more at: https://tamil.filmibeat.com/news/kamal-issue-kasthuri-s-tweet-is-absolutely-true-059665.html

See More

Latest Photos