`எனக்கு ஓ.கே தான்; ஒரே விஷயம்தான் தடையா இருந்தது!'- பிக் பாஸ்3 குறித்து ‘ஜோடி’ ஆனந்தி

Total Views : 128
Zoom In Zoom Out Read Later Print

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் பங்கேற்பது குறித்து ‘ஜோடி’ ஆனந்தி

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொள்ளப் போகும் போட்டியாளர்கள் குறித்துதான் நாளொரு லிஸ்டும் பொழுதொரு பெயருமாக இணையதளங்களில் வெளியாகி பிக் பாஸ் ஃபீவரை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறது.

சேனல் தரப்பிலிருந்து செலிபிரிட்டிகள் பலரிடமும் பேசியிருக்கிறார்கள். இன்னொரு புறம், சில செலிபிரிட்டிகள் சேனலுடன் நெருக்கமான தொடர்புடையவர்களைப் பிடித்து, அவர்கள் மூலமாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய முயற்சிப்பதும் நடக்கிறது. இப்படி இருக்க, வந்த அருமையான வாய்ப்பை தன் மகனுக்காக விட்டு விட்டதாகச் சொல்கிறார் ஆனந்தி. ‘ஜோடி’ ஷோ மூலம் பிரபலமானவர். ’தலையணைப் பூக்கள்’ சீரியல், ‘மீகாமன்’, ’தாரை தப்பட்டை’ உள்ளிட்ட சில படங்கள் என திரை வெளிச்சத்தில் இருந்தவர், சில வருடங்களுக்கு முன் திருமணமாகி குழந்தை பெற்றதும் பிரேக் விட்டார்.


பையனுக்கு ஒன்றரை வயது நடந்து கொண்டிருக்கிற சூழலில்தான் தற்போது பிக் பாஸ் 3வது சீசனில் கலந்து கொள்ள இவருக்கு வாய்ப்பு வந்திருக்கிறது. ஆனந்தியிடம் பேசிய போது,

‘சேனல் போட்ட கண்டிஷன், அந்த வீட்டுக்குள் இருந்து சமாளிக்கிறதெல்லாம் எனக்கு ஓ.கே தான். ஆனா பையனை விட்டுப் பிரிஞ்சு இருக்கணும்கிற ஒரே விஷயம்தான் தடையா இருந்தது. இதுவரைக்கும் ஒருநாள் கூட அவனை விட்டுப் பிரிஞ்சு இருந்ததில்லை. ஷூட்டிங்னாலும் அவனை அழைச்சிட்டு வரச் சம்மதிச்சா மட்டுமே அந்த வாய்ப்பை ஏத்துக்கிட்டு வந்தேன். அதனால வேற வழியே தெரியாமத்தான் இந்த வாய்ப்பை மறுத்தேன்’ என்கிறார்.

See More

Latest Photos