ஹாலிவுட்டை அதிர்ச்சியில் ஆழ்த்திய செலினாவின் திருமண போஸ்ட்

Total Views : 126
Zoom In Zoom Out Read Later Print

இன்ஸ்டாகிராம் பதிவு... குழப்பும் செலினா கோம்ஸ் !

72வது கான்ஸ் திரைப்பட விழாவில் சென்ற வாரம் தொடங்கி நடந்து வருகிறது. இந்த விழாவில் சிறப்பம்சமே நட்சத்திரங்கள் தங்கள் படக்குழுவுடன் சிவப்பு கம்பளத்தில் நடந்து வருவதுதான். சர்வதேச அளவில் இயக்குநர்களின் பெரும் கனவாய் இருக்கும் இந்த திரைப்பட விழாவின் 72ம் வருடப் பதிப்பு மே 14ம் தேதி தொடங்கி மே 25ம் தேதி வரை நடக்கவுள்ளது.

இதில் முதல் படமாக அமெரிக்காவின் 'The Dead Don’t Die' என்ற படம் திரையிடப்படவுள்ளது. ஸோம்பி நகைச்சுவை படமாக தயாராகியுள்ள இப்படத்தில் பில் முரே செலினா கோம்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர். இப்பக்குழுவினர் ரெட் கார்பெட் நடக்கும்போது மூத்த நடிகர் பில் முரேவுடன் எடுத்த போட்டோவை செலினா கோம்ஸ் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதற்கு கேப்ஷனாக " நான் பில் முரேவை திருமணம் செய்யப் போகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.


26 வயது நிரம்பிய செலினா கோம்ஸ் 68 வயதுடைய பில் மூரேவை திருமணம் செய்யவுள்ள செய்தி ஹாலிவுட்டை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. கான்ஸ் பட விழாவில் தான் முதன் முறையாகப் பங்கேற்ற பரபரப்பில் இவ்வாறு பகிர்ந்திருக்கலாம் அல்லது ஒரு நகைச்சுவைக்காகக்கூட இவ்வாறு பகிர்ந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. செலினா கோம்ஸ் பாப் பாடகர் ஜஸ்டின் பீபரின் முன்னாள் காதலி என்பது குறிப்பிடத்தக்கது.

source : https://cinema.vikatan.com/hollywood/selena-gomez-marriage-post-shocks-audience


See More

Latest Photos