ஒரே நாளில் 3 மொழிகளில் 3 படம்: புரோமோஷனுக்காக பச்சை நிறத்தில் கிளாமரா வந்த தமன்னா!

Total Views : 70
Zoom In Zoom Out Read Later Print

தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2 மற்றும் காமோஷி ஆகிய படங்கள் வரும் 31ம் தேதி வெளியாகிறது.


தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள தேவி 2மற்றும் காமோஷி ஆகிய படங்கள் வரும் 31ம் தேதி வெளியாகிறது. 

தமிழ் சின்மாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை தமன்னா. தொடர்ந்து மாஸ் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த தமன்னா பாகுபலி மற்றும் பாகுபலி 2 படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார். இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து கண்ணே கலைமானே என்ற படத்தில் நடித்திருந்தார். 


இந்தப் படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. எனினும், இப்படத்திற்கு போதுமான வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தேவி 2 படத்தில் நடித்துள்ளார். இப்படம் தெலுங்கில் அபிநேத்ரி2 என்ற டைட்டிலில் உருவாகியுள்ளது. மேலும், ஹிந்தியில் காமோஷி என்ற படத்திலும் நடித்துள்ளார். 


இந்த படங்கள் அனைத்தும் வரும் 31ம் தேதி திரைக்கு வருகிறது. இதனை முன்னிட்டு அதற்கான புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ள தமன்னா கிளாமராக உடை அணிந்து பொது இடங்களில் உலா வருகிறார். பச்சை நிறத்தில் டாப்ஸ் அணிந்து கொண்டு ஜீன்ஸ் டவுசர் அணிந்து கொண்டு பட புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இது பலரையும் விமர்சிக்க வைத்துள்ளது. பட புரோமோஷனுக்காக இப்படி ஒரு நடிகை இது போன்று உடை அணிந்து வருவதா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3 மொழிகளில் உருவாகியுள்ள ஒரு நடிகையின் 3 படம், ஒரே நாளில் ரிலீஸ் ஆவது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 

source : https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-tamannaah-bhatia-busy-with-her-three-promoting/articleshow/69443134.cms

See More

Latest Photos