இந்த 3 முக்கிய தகுதிகள் இருந்தால் ஓகே: கணக்கு பாடம் படித்த ரகுல் ப்ரீத் சிங் கண்டிஷன்!

Total Views : 126
Zoom In Zoom Out Read Later Print

கண்டிப்பாக எனக்கு கணவராக வரக்கூடியவருக்கு இந்த 3 முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும் என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கண்டிப்பாக எனக்கு கணவராக வரக்கூடியவருக்கு இந்த 3 முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும் என்று நடிகை ரகுல் ப்ரீத் சிங்தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகள் பட்டியலில் முன்னேறி வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தைத் தொடர்ந்து, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில், தீரன் அதிகாரம் ஒன்று ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதைத் தொடர்ந்து தேவ் படத்தில் கார்த்தியுடன் இணைந்து நடித்தார். எனினும், இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பு பெறவில்லை. 

இந்த நிலையில், சூர்யாவுடன் இணைந்து இவர் நடித்துள்ள என்ஜிகே படம் வரும் 31ம் தேதி வெளியாக உள்ளது. செல்வராகவன் இயக்கியுள்ள இப்படத்தில், சாய் பல்லவி, தேவராஜ், பாலா சிங், தலைவாசல் விஜய், இளவரசு, உமா பத்மநாபன், குரு சோமசுந்தரம் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் புரோமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

கணக்கு பாடப்பிரிவில் பட்டம் பெற்றுள்ள ரகுல், வருங்கால கணவர் குறித்து கேள்வி எழுப்பிய பிரபல இணையதளம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், எனக்கு கணவராக வரக்கூடியவருக்கு 3 முக்கிய தகுதிகள் இருக்க வேண்டும்.உயரம் 6 அடிக்கு மேல் இருக்க வேண்டும். 

வாழ்க்கையில் ஒரு உணர்வு அல்லது நோக்கம் இருக்க வேண்டும். பெரிய வேலையில் இருக்க வேண்டும். என்னைப் போன்று உண்மையானவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து, நகைச்சுவையாக, நீங்கள் எங்க இருக்கிறீர்கள். இப்போது வரை நான் சிங்கிள் தான். எப்போது போன் செய்வீர்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


https://tamil.samayam.com/tamil-cinema/movie-news/actress-rakul-preet-singh-reveals-her-husband-three-qualities/articleshow/69441392.cms


See More

Latest Photos