ஜாக்கெட் இல்லாம சேலை.. இதுல டான்ஸ் வேற.. பிரதமராக ஆசைப்படுறவங்க செய்யுற வேலையா இது பிரியங்கா சோப்ரா?

Total Views : 46
Zoom In Zoom Out Read Later Print

ஜாக்கெட் இல்லாமல் சேலை அணிந்த ப்ரியங்கா சோப்ரா-வைரல் வீடியோ
நியூயார்க்: இந்தியாவின் பிரதமராக பதவியேற்க வேண்டும் என்ற கனவு இருப்பதாக கூறியுள்ள நடிகை பிரியங்கா சோப்ரா, ஜாக்கெட் இல்லாமல் சேலை அணிந்து நடனமாடியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் விஜய் ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி இந்தியில் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தவர் பிரியங்கா சோப்ரா. தற்போது திருமணத்திற்கு பிறகு அமெரிக்காவில் கணவர் நிக் ஜோனஸுடன் வசித்து வருகிறார். ஹாலிவுட் படங்களில் நடித்தாலும், தொடர்ந்து பாலிவுட் படங்களில் நடிக்கவும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் விமானத்தில் பறந்தபடி இருக்கிறார். இந்நிலையில், இன்ஸ்டைல் ஃபேஷன் என்ற பத்திரிக்கையின் அட்டைப் படத்திற்காக அவர் ஜாக்கெட் அணியாமல் சேலை அணிந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதிர்ச்சி வீடியோ: இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், ஜாக்கெட்டும் அணியாமல், சேலையும் நழுவ நழுவ நடனமாடியிருந்தார் பிரியங்கா சோப்ரா. இதைக் கண்டு இந்திய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சேலை அணிவதை பெருமை எனக் கூறி, இப்படி இந்திய பாரம்பரியத்தை இழிவு படுத்தி விட்டாரே பிரியங்கா என அவருக்கு எதிராக கண்டனங்கள் எழுந்தன. இந்தியப் பிரதமர்: சமீபத்திய பேட்டி ஒன்றில், "எதிர்காலத்தில் நானும், எனது கணவரும் அரசியலுக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. நான் இந்திய பிரதமர் ஆவேன். அதே மாதிரி எனது கணவரை அமெரிக்க அதிபராக பார்க்க ஆசைப்படுகிறேன்.அரசியல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் இதுவரை நான் ஆர்வம் காட்டாமல் இருந்தேன். கணவர் ஜோன்ஸ்: ஆனால் இப்போது ஆசை வந்து இருக்கிறது. அரசியலில் நல்ல மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற விருப்பம் இருக்கிறது. திடமாக எண்ணினால் எதுவுமே அசாத்தியம் இல்லை என்பது எனது கருத்து. எனது கணவர் நிக் ஜோனஸ் கண்டிப்பாக ஒரு மிகச்சிறந்த தலைவராக வருவார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார். ரசிகர்கள் கேள்வி: அவரது இந்த பேட்டியை வைத்து, ஜாக்கெட் அணியாத வீடியோ தொடர்பாக நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர். இந்தியப் பிரதமராக ஆசைப்படும் ஒருவர் செய்யும் காரியமா இது? நம் நாட்டின் பாரம்பரியத்தை இப்படித் தான் மற்ற நாட்டவர்களுக்கு அசிங்கமாக வெளிப்படுத்துவீர்களா? என ஆவேசமாக அவர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read more at: https://tamil.filmibeat.com/heroines/priyanka-chopra-s-dance-video-raises-various-questions/articlecontent-pf96105-060009.html

See More

Latest Photos