குடிபோதையில் கார் ஓட்டி போலீசில் சிக்கினாரா ?

Total Views : 138
Zoom In Zoom Out Read Later Print

ஹைதராபாத்: நடிகை பூஜா ஹெக்டே குடிபோதையில் கார் ஓட்டி போலீசாரிடம் சிக்கினார் என்று வெளியான தகவல் தொடர்பாக அவரின் மேனேஜர் ஹரி விளக்கம் அளித்துள்ளார்.

ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் மும்பையை சேர்ந்த பூஜா ஹெக்டே. அவர் தற்போது பாலிவுட் மற்றும் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் மகேஷ்பாபுவுடன் சேர்ந்து நடித்த மகார்ஷி தெலுங்கு படம் கடந்த வியாழக்கிழமை ரிலீஸாகி நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பூஜா மகரிஷி பட ரிலீஸுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பூஜா மூக்கு முட்ட குடித்துவிட்டு காரை ஓட்டிக் கொண்டு ஹோட்டலுக்கு சென்ற வழியில் போலீசாரிடம் சிக்கினார் என்ற தகவல் தீயாக பரவியது. எஸ்கேப் குடிபோதையில் இருந்த பூஜாவை வேறு ஒரு காரில் ஏற்றி ஹோட்டலுக்கு அனுப்பி வைத்துவிட்டார் அவரின் மேனேஜர் ஹரி என்று தகவல் வெளியாகின. இந்நிலையில் இது குறித்து ஹரி தற்போது விளக்கம் அளித்துள்ளார். வதந்தி பூஜா பற்றி வெளியான தகவலில் உண்மை இல்லை. தனக்கு பழக்கம் இல்லாத ஹைதராபாத் நகரில் அவர் ஏன் கார் ஓட்டப் போகிறார்?.

அவருக்கு இரவு 12.20 மணிக்கு ஃபிளைட் என்பதால் அவரை விமான நிலையத்தில் இறக்கிவிடுமாறு கூறி படத் தயாரிப்பு குழு காருடன் டிரைவரை அனுப்பியது என்கிறார் பூஜாவின் மேனேஜர் ஹரி. போலீஸ் பூஜா பற்றிய செய்தியை பல இணையதளங்களில் படித்தேன். இந்த வதந்திக்கு பின்னால் யார் இருக்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் விளக்கம் அளிக்க வேண்டியது என் கடமை. பூஜா குடிபோதையில் கார் ஓட்டி சிக்கியிருந்தால் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்திருப்பார்கள் அல்லவா, அப்படி எதுவும் நடக்கவில்லையே.

இது யாரோ கிளப்பிவிட்ட வதந்தி. தொடர்ந்து வதந்தியை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளேன் என்று ஹரி தெரிவித்துள்ளார்.

Read more at: https://tamil.filmibeat.com/heroines/drunk-and-driving-issue-pooja-hegde-s-manager-clears-the-air/articlecontent-pf94974-059588.html

See More

Latest Photos