உங்களுக்குத் தெரியுமா?.. தமிழகத்தில் ஆங்கிலமும் அதிகம் பேசப்படுகிறது!

Total Views : 28
Zoom In Zoom Out Read Later Print

அதிகம் பேசப்படும் முதல் 3 மொழிகள் எவை?..வெளியானது புள்ளி விவரம்..வீடியோ

டெல்லி: இந்தியாவில் ஆங்கிலத்தை அதிகம் பேசும் மாநிலங்களில் தமிழகம் 2-வது இடத்தில் இருக்கிறது என்கிறது 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரம். இந்தியாவில் அரசியல் சாசன அட்டவணையில் 22 மொழிகள் இடம்பெற்றுள்ளன. இந்த அட்டவணையில் இடம்பெறாத ஆங்கிலம் உட்பட 99 மொழிகளும் இந்தியாவில் தாய்மொழியாகக் கொண்டு பேசப்படுகின்றன. செய்திகள் சுருக்கமாக தமிழகத்தில் நடப்பது இரட்டை ஆட்சி: அமைச்சர் ஜெயக்குமார்! யாஷிகா ஆனந்தின் அடுத்த படம்: நாளை ஆடியோ ரிலீஸ்! யூ-டர்ன் ரீமேக் படபிடிப்பை முடித்த சமந்தா! 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு விவரப்படி ஆங்கிலத்தை அதிகம் பேசும் மாநிலங்களில் மகாராஷ்டிரா முதலிடம் வகிக்கிறது. அம்மாநிலத்தில் 1,06,656 பேர் ஆங்கிலத்தில் பேசுவதாக பதிவு செய்துள்ளனர். இதற்கு அடுத்ததாக தமிழ்நாட்டில் 24,495 பேர் ஆங்கிலம் அதிகம் பேசப்படுகிறது என குறிப்பிட்டுள்ளனர். கர்நாடகாவில் 23, 227 பேரும் மேற்கு வங்கத்தில் 14, 945 பேரும் ராஜஸ்தானில் 13, 202 பேரும் ஆங்கிலத்தை அதிகம் பேசுகின்றனர். இந்தியாவில் மொத்தம் 25,9678 ஆங்கிலத்தை முதன்மை மொழியாகக் கொண்டு பேசுகின்றனர் என்கிறது இப்புள்ளி விவரம்.

இந்தியாவில் ஆங்கிலம் அதிகம் பேசும் மக்கள் - டாப் 5 மாநிலங்கள்  

மக்கள் எண்ணிக்கை  

மகாராஷ்டிரா      1,06,656  

தமிழ்நாடு                 24,495  

கர்நாடகா                 23,227  

மேற்கு வங்கம்         14,945  

ராஜஸ்தான்              13,202


Source : https://tamil.oneindia.com/news/india/english-as-2-6-lakh-people-s-mother-tongue-india-323549.html

See More

Latest Photos