அமெரிக்காவில் பத்திரிகை அலுவலகத்துக்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு- 5 பேர் பலி

Total Views : 29
Zoom In Zoom Out Read Later Print

வாஷிங்டன்: அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தின் கேப்பிட்டல் கெஜட் பத்திரிகை அலுவலகத்துக்குல் நுழைந்த மர்ம நபர் நடத்திய பயங்கர துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் பலியாகினர். பலர் படுகாயமடைந்தனர்.

மேரிலேண்ட் மாகாணத்தின் அன்னபோலீஸில் ஆனி அருண்டேல் கவுண்ட்டியில் கேப்பிட்டல் கெஜட் பத்திரிகை அலுவலம் செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்துக்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் பத்திரிகை அலுவலகம் இயங்கிய அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து அனைவரையும் வெளியேற்றினர். இத்தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். 

இப் பயங்கர துப்பாக்கிச் சூட்டை நடத்திய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். புளோரிடாவின் பார்க்லேண்ட் பள்ளிக் கூடத்தில் பிப்ரவரி மாதம் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 17 பேரும் டெக்சாஸ் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூட்டில் 10 பேரும் பலியாகி இருந்தனர். 

இந்த நிலையில் பத்திரிகை அலுவலக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Source : https://tamil.oneindia.com/news/international/us-5-killed-multiple-shooting-at-the-capital-newspaper-in-maryland-s-annapolis-323629.html


See More

Latest Photos