மீண்டும் களம் குதித்த வார்னர், ஸ்டீவ் ஸ்மித்... !

Total Views : 27
Zoom In Zoom Out Read Later Print

டோரன்டோ: பந்தை சேதப்படுத்திய விவகாரத்தில் தடை விதிக்கப்பட்ட டேவிட் வார்னரும், ஸ்டீவ் ஸ்மித்தும் கனடாவில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளனர்.

கனடா கிரிக்கெட் சங்கம் நடத்தும் 6 அணிகள் பங்குபெறும் குளோபல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கனடாவில் நடைபெறுகிறது. இப்போட்டித் தொடரில் ஆஸ்திரேலிய வீரர்கள் டேவிட் வார்னர் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். 

கனடா கிரிக்கெட் சங்கம் மற்றும் மெர்குரி குரூப் இணைத்து நடத்துகின்றன. போட்டிகள் ஜூன் 28 ஆம் தேதி தொடங்கி ஜூலை 15 ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் நடைபெறும் ஐபில் தொடர் போன்றதொரு 20 ஓவர் போட்டித்தொடர் ஆகும். உலகின் பிரபலமான வீரர்கள் பலர் இத்தொடரில் பங்குபெற்று விளையாடுகிறார்கள். 


எந்தெந்த அணிகள் 

டொரோண்டோ நேஷனல்ஸ் 

வான்கூவர் நைட்ஸ் 

மாண்ட்ரீல் டைகர்ஸ் 

எட்மன்டன் ராயல்ஸ் 

வின்னிபெக் ஹாக்ஸ் 

கிரிக்கெட் வெஸ்ட் இண்டீஸ் பி டீம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன.


 வார்னர், ஸ்மித் வருகை 

கடந்த மார்ச் மாதம் தென்னாபிரிக்கா அணிக்கெதிரான நடைபெற்ற போட்டியில் பந்தை சேதப்படுத்திய குற்றத்தில் தடை விதிக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித், வார்னர், பேன்கிராப்ட் ஆகியோர் இதில் விளையாடவுள்ளனர். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட இவர்களுக்கு ஒரு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. ஸ்மித் மற்றும் வார்னர் இருவரும் ஐபில் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படவில்லை. இத் தடையானது சர்வதேச போட்டிகளுக்கு மட்டுமே பொருந்தும், இதுபோன்ற உள்ளூர் போட்டிகளில் விளையாட இந்த தடை பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது. 


ஸ்மித் அரை சதம் 

ஸ்மித் டொரோண்டோ நேஷனல்ஸ் அணிக்காகவும் , வார்னர் வின்னிபெக் ஹாக்ஸ் அணிக்காகவும் களமிறங்குகிறார்கள். நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் டொரோண்டோ நேஷனல்ஸ் மற்றும் வான்கூவர் நைட்ஸ் அணிகள் மோதின.ஸ்டீவன் ஸ்மித் டொரோண்டோ நேஷனல்ஸ் அணிக்காக களமிறங்கினார். இப்போட்டியில் சிறப்பாக ஆடிய ஸ்மித் 41 பந்துகளில் 61 ரன்களை குவித்தார்.இதில் 8 பௌண்டரிகளும் 1 சிக்ஸர் அடங்கும். 


கிறிஸ் கெய்ல் 

முதலில் ஆடிய கிறிஸ் கெயில் தலைமையிலான வான்கூவர் நைட்ஸ் அணி 20 ஓவர்களில் 227 ரன்களை குவித்தது.அடுத்து ஆடிய சம்மி தலைமையிலான டொரோண்டோ நேஷனல்ஸ் அணி 19.2 ஓவர்களில் 231 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

Source : https://tamil.mykhel.com/cricket/warner-smith-play-canada-cricket-series/articlecontent-pf24123-010726.html

See More

Latest Photos