“யார் நீங்க”னு ரஜினியை பார்த்து ஏன் கேட்டேன் தெரியுமா? அந்த நபரே சோகத்துடன் வெளியிட்ட வீடியோ

Total Views : 224
Zoom In Zoom Out Read Later Print

சில நாட்களுக்கு முன் ரஜினி தூத்துக்குடியில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார். அப்போது ஒரு நபர் நீங்கள் யார் என்று ரஜினியை பார்த்து கேட்டது சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நேரத்தில் அந்த நபர் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர், நான் ரஜினியை பார்த்து ஏன் அப்படி கேட்டேன் என்றால்,

அவர் ஒரு பெரிய மனிதர், 100 நாட்களாக நாங்கள் போராட்டம் செய்த போது எங்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்ற நோக்கத்தில் தான் கேட்டேன்.

நான் கேட்ட நோக்கம் வேறு, ஆனால் பத்திரிக்கைகளில் தவறாக என்னை சித்தரிக்கிறார்கள். இதனால் எனக்கு மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது என்று பேசியுள்ளார்.


See More

Latest Photos